இந்த புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை என ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மேல் முறையீட்டு வழக்கில் முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஹெச்.ராஜா தரப்பில் விசாரணை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கனவே நிறுத்து வைத்துள்ளதாகவும், இந்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை மனுதாரருக்கு விதிக்கபட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றுமம் இந்த மனு 4 வாரங்களில் காவல்துறை பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
The post அவதூறு கருத்துக்களுக்காக எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.