சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து, பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர். நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வுக்கு பின்னர் பல்கலைக் கழகங்களின் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை: பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தினார் ஆளுநர் ஆர்.என். ரவி appeared first on Dinakaran.