×

டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

டெல்லி: டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டது. மன்மோகன் சிங்கிற்கு, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது. டெல்லி நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்குக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படுகிறது. மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். யமுனை நதிக்கரையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி கோலந்துகொண்டார்.

 

The post டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Delhi ,Congress ,MANMOGAN SINGH ,MALLIKARJUNA KHARKE ,RAKULKANTHI ,PRIYANKA GANDHI ,
× RELATED டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர்...