ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்: மதுரை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன் அனுமதி பெற வேண்டும். 8 அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

மதுரையில் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் இ சேவை மையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். காளைகளுக்கு மருத்துவர்கள் வழங்கிய மருத்துவ சான்று மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி சான்றுகளை வைத்து இசேவை மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் ஒரு மாட்டிற்கு தகுதிச் சான்றிதழ் பெற்று வேற நபர்களின் ஆதார் கார்டு மூலம் முன்பதிவு செய்யக்கூடாது. ஒரு ஊரில் விளையாடும் மாடு பிடி வீரரும் வேறொரு ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியிட அனுமதி இல்லை.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக ஏற்கனவே அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரை குறிப்பிட்டு காளைகளை கூப்பிட கூடாது. இதனைத்தொடர்ந்து காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

 

The post ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்: மதுரை ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: