புதுக்கோட்டையில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா

* பணிகளை அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்

* முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டத்தில் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவிகளின் உயர்கல்வியினை உறுதி செய்யும் நோக்கதில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ‘புதுமைப்பெண் திட்டம்” 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் 30.12.2024 அன்று தொடங்கப்பட உள்ளதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தினை துவக்கி வைப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுடன், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

எனவே, புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை தொடர்புடைய அரசு அலுவலர்கள் சிறந்த முறையில் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தக்குமார், மாமன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: