திறமை மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும். கடந்த நவம்பர் 15ம் தேதி அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மையை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில்,
‘‘கல்வி மற்றும் கார்ப்பரேட் உலகங்களுக்கு இடையே பாலங்களை கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸின் தொலைநோக்குப் பார்வைக்கு ‘சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறலாம். ரெனால்ட் நிசான் டெக் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து, பல்வேறு எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான அளவுகோலை நிர்ணயிக்கின்றன. பெருநிறுவனங்கள் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
The post சென்னை ஐஐடி, ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.