கோமாளித்தனத்தின் உச்சம் அண்ணாமலை சவுக்கடி காட்சிதான் இந்தாண்டின் மிகச்சிறந்த காமெடி: நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி

சென்னை : மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணாமலை சவுக்கால் அடிக்கும் போது கூட 5 பேர் தான் இருந்தாங்க. ஒன்னு சவுக்கு வாடகைக்கு விட்டவன். அடுத்து அதற்கு காசு கொடுத்தவன், 10 லட்சம் ரூபாய் ஒரு ப்ரண்ட் கொடுப்பார்ல அவர். ஒருவர் அரசியலுக்கு புதிதாக இருக்கலாம். அரசியலே தெரியாத ஒரு கோமாளி என்றால் அது அண்ணாமலைதான். இவர் எதுக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சவுக்கால அடித்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு அண்ணாமலையா பொறுப்பு.

இவர் தமிழ்நாட்டின் டிஜிபியா. தமிழ்நாட்டின் முதல்வரா, இவர் எதுக்கு அடித்துக் கொள்கிறார். இது ஒரு பைத்தியக்காரத்தனமான விஷயம். இதை கோமாளித்தனத்தின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அண்ணாமலையை தலைவராக செலக்ட் பண்ணுனவங்கதான் தன்னத்தானே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும். நல்லவேளை முன்னாடியே நான் பாஜவில் இருந்து வந்து விட்டேன். அதுவும் பச்சை டிரஸ்ஸை போட்டு கொள்கிறேன். அட்டை வேல் வைத்து கொண்டு ஊரை சுற்றுறேன்.

இது எல்லாம் யாரை ஏமாத்துவதற்கு பண்றாங்க. இனி அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட மாட்டார். பாஜ ஆட்சி அமைக்கிற வரைக்கும் நான் வேட்டி கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் டேன்ஜராகி இருக்கும். பட்டாப்பட்டியோட அலைய வேண்டியதாக ஆகியிருக்கும். தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு அண்ணாமலை. வீட்டிற்கு ஒரு கொடி ஏத்துறேன் என்று சொன்னாரு. தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கொடி ஏத்துறேன் என்று சொன்னாரு.

கோவையில் கார் பாம் வெடித்த போது தமிழ்நாட்டில் 60 இடத்தில் மீட்டிங் போடுறேன் என்று சொன்னார். ஒன்னுமே செய்ய மாட்டார்.  தமிழ்நாடு பாஜ ஒரு பைனான்ஸ் கம்பெனி மாதிரி. அண்ணன் அண்ணாமலை, அண்ணாமலை ஆர்மி என்று போடுறவன். ஒருத்தன் சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கான். இன்னொருத்தன் காம்போவில் இருக்கான். இன்னொருத்தன் அமெரிக்காவில் இருக்கான். 4 பேர் இருக்காங்க. அவங்க எப்படி இங்கே ஓட்டு போடுவாங்க.

நாங்கள் வீட்டில் காமெடி சேனல் பார்த்து கொண்டிருந்தோம். நான் வந்தபோது செய்தி சேனல் போட்டேன். அண்ணாமலை சவுக்கால் அடித்து கொண்டு இருந்தார். என்னடா இவரு இப்படி கோமாளி தனம் பண்றார் என்று மறுபடியும் காமெடி சேனல் மாற்றுவதற்குள், பேரனே கத்தினான் இதுவே நல்ல காமெடியாக இருக்கிறது என்று. இதே போடு என்று கத்துறான். குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்த இந்த சவுக்கடி சீனை எல்லா காமெடி சேனலில் போட்டால் இந்த ஆண்டின் சிறந்த காமெடி இதுதான். அனைவரும் அவரை காறிகாறி துப்புவாங்க.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

The post கோமாளித்தனத்தின் உச்சம் அண்ணாமலை சவுக்கடி காட்சிதான் இந்தாண்டின் மிகச்சிறந்த காமெடி: நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: