×

சித்தூரில் கடந்த 12 மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 630 பேர் மீது வழக்கு

*ரூ.63 லட்சம் அபராதம் விதித்து வசூல்

சித்தூர் : சித்தூரில் கடந்த 12 மாதங்களில் மதுபோதையில் வாகன ஓட்டிய 630 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.63 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. சித்தூர் போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நித்ய பாபு நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சித்தூர் மாநகரத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது. இதுதொடர்பாக எஸ்பி மணிகண்டா உத்தரவின் பேரில் சித்தூர் நகர டி.எஸ்.பி சாய்நாத் ஆலோசனையின் படி, போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு சித்தூர் அடுத்த கட்ட மஞ்சு, சந்தப்பேட்டை, முருக்கம்பட்டு, இருவாரம், திருத்தணி சாலை, கொங்கா ரெட்டி பள்ளி, வேலூர் சாலை, பலமநேர் சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.

அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 18 பேர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று சித்தூர் முதன்மை ஜூனியர் சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி உமாதேவி குடிபோதையில் வாகன ஓட்டிய 18 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அதன்படி, குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் ரூ.1.80 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மேலும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய நபர்களிடம் மற்றொரு முறை குடித்துவிட்டு வாகனத்தை இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம், இரண்டு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 12 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 630 பேரிடமிருந்து சித்தூர் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் ரூ.63 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளனர். எனவே இருசக்கர வாகன ஓட்டுகள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அனைவரின் பொறுப்பு. மாவட்டத்தில் உள்ள அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உங்கள் உயிருக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நேற்று சித்தூர் காந்தி சிலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

The post சித்தூரில் கடந்த 12 மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 630 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Chittoor Traffic Police Station ,Dinakaran ,
× RELATED குடிபாலா- எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை...