திருமலை: புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ம் தேதி வெளியானபோது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூனை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் அல்லு அர்ஜூன் நீதிபதி முன்னிலையில் ஆஜாரானார். அப்போது அல்லு அர்ஜூனுக்கு ஆஜராகி நிரந்தர ஜாமீன் வழங்க கேட்டு அவரது வக்கீல்கள் மனு செய்தனர். கொண்டனர். இதற்கு நீதிபதி அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு 30ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
The post தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் காணொலி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர் appeared first on Dinakaran.