×

பட்டாம்பி அருகே ஐயப்பன் கோயிலில் தாலப்பொலி திருவிழா

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே வெள்ளி நேழி சாக்கியாம்காவு ஐயப்பன் கோயிலில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. மண்டல கால நிறைவு நாளை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கோயிலில் தாலப்பொலி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்தாண்டும் கடந்த 41 நாட்களாக கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.

நேற்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து மூலவருக்கு அபிஷேகம் – அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பந்தலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு 7 யானைகள் அலங்காரத்துடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க உற்சவர்கள் யானை பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கோயில் மைதானத்தில் மக்கள் திரண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இரவு 9 மணியளவில் சிறுவர், சிறுமிகள் கார்த்திகை தீபங்கள் ஏந்தி செண்டை வாத்யத்துடன் வீதியுலா வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தாயம்பகா செண்டை வாத்தியம் அரங்கேறியது. தொடர்ந்து ஐயப்பனின் வரலாற்று பின்னணியுடன் உடுக்குப்பாட்டு நடந்தது. மேலும் பள்ளிவேட்டை நிகழ்ச்சி அலங்கார யானைகளுடன் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு சந்தன அபிஷேகத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

The post பட்டாம்பி அருகே ஐயப்பன் கோயிலில் தாலப்பொலி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thalapoli festival ,Ayyappan temple ,Pattambi ,Palakkad ,Velli Nezhi Sakiyamkavu Ayyappan temple ,
× RELATED கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு