விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டு அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. சுடு மண்ணால் ஆன முழுமையான 2 பானைகள் மற்றும் மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வை ஜூன் 18ம் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.

இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின.பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என சுமார் 4,660 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் 3ம் கட்ட 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டு அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: