சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் மறைந்து விட்டார்; இந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது. இந்தியாவை வழிநடத்திய ஒரு கல்விமேதை காலமாகிவிட்டார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.