இந்நிலையில், மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.51 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.