பாத்ரூமில் வழுக்கி விழுந்து 17 வயது சிறுவன் உயிரிழப்பு

மாதவரம்: புளியந்தோப்பு திருவிக நகர் 8வது தெருவை சேர்ந்தவர் ஆசிப் அப்துல் (17). இவர் பெரியமேட்டில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 10 மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்கச் செல்வதற்கு முன் பாத்ரூம் சென்றுள்ளார். அதன்பிறகு வெகு நேரமாகியும் பாத்ரூமில் இருந்து வெளியே வராததால் அவரது அண்ணன் சையது ரஹ்மத்துல்லா பாத்ரூமுக்கு சென்று பார்த்தபோது ஆசிப் அப்துல் பாத்ரூமில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

உடனடியாக அவரது அண்ணன் ஆசிப் அப்துல்லாவை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, ஆசிப் அப்துல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாத்ரூமில் வழுக்கி விழுந்து 17 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: