எங்கள் வீடியோவை டீன், பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் என மிரட்டினான் : அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் FIR வெளியீடு!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ பதிவு செய்த நடைபாதை பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து கைதான ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஞானசேகரனை சிறையில் அடைக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில், “நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் என மிரட்டினான். செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான். நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை. அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எங்கள் வீடியோவை டீன், பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் என மிரட்டினான் : அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் FIR வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: