நிதிநிலுவை இருக்கிறது என்றால் ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிதான் நிலுவையில் இருக்கிறது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. அது குறித்து யாரும் கேள்வி கேட்க மறுக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வற்புறுத்துகிறது. ஒத்துழைக்கும் பட்சத்தில் உடனடியாக நிதியை விடுவிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். ஒன்றிய அரசு எவ்வளவோ நிதி நெருக்கடிகளை தமிழகத்துக்கு கொடுத்து வருகிறது.
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் அதில் 29 பைசாதான் நமக்கு திரும்ப வருகிறது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். அதனால்தான், நாம் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறோம். மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் நமக்கு எது தேவையோ, நமது மாணவர்களுக்கு எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய நம்மால் முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேண்டியதை செய்ய முடியும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி appeared first on Dinakaran.