ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்சிபி அதிகாரி மாற்றம்! : ஒன்றிய உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு!!

டெல்லி: ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் மாற்றப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்த புகாரில் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. என்சிபி துணை இயக்குநரான ஞானேஸ்வர் சிங் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஞானேஸ்வர் சிங் மீது புகார் எழுந்தது.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப்பொருட்களை கையாள்வதில் பல விதிமீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகச் சிலர் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, என்.சி.பி. அதிகாரி ஞானேஸ்வர் சிங்குக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அடுத்தடுத்து புகார் எழுந்ததால் ஞானேஸ்வர் சிங்குக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. இதனிடையே ஞானேஸ்வர் சிங்குக்கு எதிராக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் என்.சி.பி.யில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநராக ஞானேஸ்வர் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி வாபஸ் பெறப்பட்டுள்ளார்.

The post ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்சிபி அதிகாரி மாற்றம்! : ஒன்றிய உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: