கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிந்தது

சென்னை: விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.2,500லிருந்து ரூ.2,000க்கும், ஐஸ் மல்லி ரூ.1,800லிருந்து ரூ.1,600க்கும், ஜாதிமல்லி, முல்லை ரூ.750லிருந்து ரூ.300க்கும், கனகாம்பரம் 1000லிருந்து ரூ.800க் கும்,அரளிப்பூ ரூ.600லிருந்து ரூ.200க்கும், சாமந்தி ரூ.170லிருந்து ரூ.100க்கும்,சம்பங்கி ரூ.200லிருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180லிருந்து ரூ.100க்கும், விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், விலை குறைவால் மக்கள் அதிகளவில் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர் என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: