முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நூலகத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ப.சிதம்பரம், “தனது ஏற்பாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை திறந்து வைத்திட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது கார்த்தி ப.சிதம்பரம் எம்பி உடன் இருந்தார்.

The post முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: