இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், கலெக்டர் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன், பூண்டி பிடிஓ முரளி, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு இடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க சென்றனர்.
இதனையறிந்த, முதியவர் வஜ்ஜிரவேலு அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல் நிலைநீர்தேக்க தொட்டி மீது ஏறிக்கொண்டு, இந்த இடத்தை அகற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் என வருவாய் துறையினரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அப்போது, அங்கிருந்த பென்னாலூர்பேட்டை போலீசார் வஜ்ஜிரவேலுவிடம் 1 மணிநேரத்திற்கும் மேலாக சமரசம் பேசி, அவரை கீழே இறங்கச் செய்து அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது ேநரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வருவாய் துறையினர் சுமார் ₹6 லட்சம் மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
The post ஒதப்பை கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; குடிநீர்தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் appeared first on Dinakaran.