வெளியே வந்த மாணவி கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்க அப்பா எங்களை ஸ்கூலுக்கு போகக்கூடாதுனு சொல்லி அடிக்கிறார். அதனால், 11ம் வகுப்பு படித்து வந்த என் அக்கா ஸ்கூலுக்கு போறதை நிறுத்திவிட்டார். இப்ப என்னையும் மது குடித்துவிட்டு வந்து அடித்து, போகக்கூடாதுனு சொல்கிறார். நான் படிக்கனும். அவர் அடித்ததால், என் அம்மாவிற்கு 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்க 3 பேரையும் படிக்க வைக்க வேண்டும்,’’ என்றார். இப்புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் அதிகாரிகள் கூறி அனுப்பினர்.
The post ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு என்னையும் அக்காவையும் அப்பா அடிக்கிறாரு… நடவடிக்கை எடுங்க… சேலம் கலெக்டரிடம் 10ம் வகுப்பு மாணவி கண்ணீர் மனு appeared first on Dinakaran.