வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 3 சகோதரர்கள் பலி ஆற்றில் மூவர் மூழ்கினர்

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (53). லாரி ஓட்டுநரான இவரது மகன்களான லோகேஷ்(24), இரட்டையர்களான விக்ரம்(22), சூர்யா (22) ஆகியோர் நேற்று முன்தினம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கால்வாயில் தவறி விழுந்த லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற இரட்டையர்களும் குதித்துள்ளனர். மூவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஆனதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்ததில் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு அரையாண்டு இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் குடமுருட்டி பகுதியில் உள்ள காவிரியாறு அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர். சிலர் தெர்மாகோல் உதவியுடன் குளித்துக்கொண்டிருந்தனர். தெர்மகோல் திடீரென உடைந்ததால் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (15), விக்னேஷ் (16) ஆகியோர் நீரில் மூழ்கினர். இவர்களை காப்பாற்ற சிம்பு என்பவர் இறங்கினார். அவரும் மூழ்கினார்.

The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 3 சகோதரர்கள் பலி ஆற்றில் மூவர் மூழ்கினர் appeared first on Dinakaran.

Related Stories: