குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சி பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது.
ஒன்றிய பாஜ அரசின் பயம் ஹரியானா மாநில தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையை கெடுத்து பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது. தனது அமைப்பின் சுதந்திரத்துக்காக போராடுவதற்கு பதிலாக தேர்தல் ஆணையமும், பிரதமர் மோடியும் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க பாஜ தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப் படுகின்றன.
* சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது.
* மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.
The post தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.