×

சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கேலா லில்லியம் மலர் உற்பத்தி

ஊட்டி: சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் கேலா லில்லியம் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோல் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்விரு மலர்கண்காட்சியும் கோடை காலங்களில் நடத்தப்படும். இந்த நிலையில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிலும் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நடக்க உள்ள மலர் கண்காட்சிகாக கடந்த 2 மாதங்களாக அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்கான லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளில் டெய்சி, மேரி கோல்டு, பேன்சி, பால்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டது. இந்த மலர் தொட்டிகளில் பல்வேறு வகையான பூக்கள் பூத்த நிலையில் அந்த மலர் தொட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூங்கா நர்சரியில் பல்லாயிரம் தொட்டிகளில் கேலா வில்லியம் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளனர். இவை பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறது. இதையும் சென்னை மலர் கண்காட்சிக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கேலா லில்லியம் மலர் உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Noti Botanical Garden ,Chennai ,Ooty, Neelgiri district ,Bryant ,Kodaikanal ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!