- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- சென்னை
- பள்ளி கல்வித் துறை
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- பொது நூலகம்
- இயக்கம்
- திருவள்ளுவர் சிலையின் 25வது வெள்ளி விழா...
சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் மாணவர்களுடன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார். அத்துடன், பொதுநூலக இயக்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
நிதிநிலுவை இருக்கிறது என்றால் ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிதான் நிலுவையில் இருக்கிறது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. அது குறித்து யாரும் கேள்வி கேட்க மறுக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வற்புறுத்துகிறது. ஒத்துழைக்கும் பட்சத்தில் உடனடியாக நிதியை விடுவிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். ஒன்றிய அரசு எவ்வளவோ நிதி நெருக்கடிகளை தமிழகத்துக்கு கொடுத்து வருகிறது.
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் அதில் 29 பைசாதான் நமக்கு திரும்ப வருகிறது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். அதனால்தான், நாம் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறோம். மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் நமக்கு எது தேவையோ, நமது மாணவர்களுக்கு எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய நம்மால் முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேண்டியதை செய்ய முடியும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி appeared first on Dinakaran.