துபாய்: செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி சுமார் 100 வணிகக் கப்பல்களின் மீது தாக்குதல் நடந்துள்ளன.
இதையடுத்து, செங்கடலில் வணிக கப்பல்களின் பாதுகாப்புக்கு ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு அமெரிக்க கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் ஹாரி ட்ரூமேன் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளது. நேற்று ரோந்து பணியின் போது அமெரிக்க போர் கப்பலான யுஎஸ்எஸ் கெட்டிஸ்பர்க் கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது.
அந்த சமயத்தில் ஹாரி ட்ரூமேன் கப்பலில் இருந்து புறப்பட்ட போர் விமானம் மீது தவறுதலாக தாக்குதல் நடந்துள்ளது. இதில், விமானம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 2 விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒரு விமானி காயமடைந்தார் என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
The post ரோந்து பணியின் போது நிகழ்ந்த தவறு சொந்த நாட்டின் போர் விமானம் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் appeared first on Dinakaran.