தேன்கனிக்கோட்டை: சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வசிக்கும் 35 வயது பெண், கணவன் இறந்து விட்டதால் தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் என 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மணி (27) என்ற கூலித்தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த வாலிபர் மூலம் அந்த பெண்ணுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் பிறந்தனர். இதையடுத்து 8 குழந்தைகளுடன் தம்பதி வசித்து வருகின்றனர்.
இதனிடையே அந்த பெண்ணின் முதல் கணவனுக்கு பிறந்த 13 வயது மகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமியை கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த பெண் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், சிறுமியிடம் விசாரித்தபோது அவரது 2வது கணவன் மணி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ததும், அதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண் தனது 2வது கணவன் மீது போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ் இதுகுறித்த புகாரின்பேரில் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்த ேபாலீசார் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை appeared first on Dinakaran.