×

பெப்பர் ஸ்பிரே அடித்து வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (27). நகை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று காலை புதுவயலில் இருந்து டூவீலரில் காரைக்குடி முத்துப்பட்டினத்திற்கு சென்று வியாபாரி ஒருவரிடம் ரூ.30 லட்சம் வாங்கி கொண்டு காரைக்குடி ஜாகீர் உசேன் தெரு வழியாக காலை 9.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர், அரவிந்தனை வழிமறித்து, திடீரென அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே தெளித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் ரூ.30 லட்சம் வைக்கப்பட்டிருந்த அவரது டூவீலரை எடுத்து கொண்டு தப்பினர். புகாரின்படி காரைக்குடி வடக்கு போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பெப்பர் ஸ்பிரே அடித்து வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Arvinthan ,Puduwayal ,Sivaganga district ,Karaikudi Muthuppatnam ,Duweiler ,Dinakaran ,
× RELATED காரைக்குடி பகுதியில் மாடுகளுக்கு...