- பாஜக
- வேலூர்
- கட்பாடி நீதிமன்றம்
- விட்டல் குமார்
- வேலூர் மாவட்டம்
- கமல்ஹாசன்
- சந்தோஷ்குமார்
- காத்பாடி நீதிமன்றம்
- நீதிபதி
- ஜெயகனேஷ்
- கே
- குபம் நாகல்
- தின மலர்
வேலூர் : வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல்குமார் கொலை வழக்கில் 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கமல்ஹாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 3-நாட்களுக்கு பிறகு காட்பாடி நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயகணேஷ் முன்பு சரண் அடைந்தனர். டிச.16ல் கே.வி.குப்பம் நாகல் கிராமத்தைச் சேர்ந்த விட்டல்குமார் (47), சென்னாங்குப்பத்தில் ரத்த காயத்துடன் கிடந்தார். உறவினர்கள் விட்டல் குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். விட்டல்குமாரை தலையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் என கூறி, கமல்ஹாசன், சந்தோஷ்குமார் வாக்குமூலம் அளித்தனர்.
The post பாஜக நிர்வாகி கொலை: 2 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.