×

பைக் டாக்ஸி முறை தடை கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், டிச. 20: பைக் டாக்ஸி முறையினை தடை செய்ய கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் பைக் டாக்சி முறையினை தடை செய்ய கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்புடைய ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் அரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹனிபா, பொருளா செல்வம், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் பழனிவேல், ராஜேந்திரன், தமிழ்வாணன், வீரமணி, நபி, மதியழகன், மணி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பைக் டாக்ஸி முறை தடை கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : workers' unions ,Thiruvarur ,CITU ,Dinakaran ,
× RELATED சிறுவர், சிறுமியர் ஆறுகளில் குளிப்பதை...