இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, மனுதாரரின் ஒரே மகன் என்ற அடிப்படையில் இறுதிச் சடங்கை சதீஷ் தான் மேற்கொள்ள வேண்டுமெனவும் அதனால் அவசரகால விடுப்பு வழங்க வேண்டுமென வாதிட்டார். சிறைத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மற்ற கைதிகளை போல விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பை சிறைத்துறை அதிகாரிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.
அவர்கள் விசாரணை நீதிமன்றங்களை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழந்தால் அவர்களால் இறுதிச் சடங்கில் எப்படி பங்கேற்க இயலும்? என்று கேள்வி எழுப்பியதுடன், விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்கும் வகையில், உரிய நிபந்தனைகளுடன் அவர்களை சிறைத்துறை அதிகாரிகளே அவசரக்கால விடுப்பில் அனுப்பும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
The post விசாரணை கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.