சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாட்களில் மதியம் 12.15 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடையும்/மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 25 மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறு நாட்களில் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோன்று, சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வழியாக கொச்சுவேலிக்கு டிசம்பர் 23 மற்றும் 30ம் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும், மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 மற்றும் 31ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.