இந்தியாவில் மொத்தம் 78 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் விஐடி பல்கலைக்கழகம் இந்தியளவில் 8ம் இடத்தை பெற்றுள்ளது. உலக அளவை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட விஐடி உலக அளவில் 53 இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி 17 வகையான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து பல்வேறு பணிகள் உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
உலகளவில் முதல் 400 கல்வி நிறுவனங்களில் நிலையான தன்மை பிரிவில் விஐடியும் இடம் பெற்றுள்ளது. க்யூ.எஸ்ஸின் நிலையான தன்மை தரவரிசை பட்டியல் 3 விதமான செயல்பாடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அவை சுற்றுச்சூழல் தாக்கம், சமுதாயத் தாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகும். இந்தியாவில் டெல்லி ஐஐடி முதலிடமும், உலக அளவில் கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் முதலிடமும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை பிரிவில் உலகளவில் விஐடி பல்கலை. 396வது இடத்தை பிடித்தது: கடந்த ஆண்டை விட 53 இடங்கள் முன்னேறி சாதனை appeared first on Dinakaran.