ஆட்டோ திருடிய அண்ணன், தம்பி கைது

ஆலந்தூர்: உள்ளகரத்தில் ஆட்டோ திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். உள்ளகரம், மதியழகன் தெருவை சேர்ந்தவர் மாபாஷா (41). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு, வழக்கம் போல் ஆட்டோவை தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ஆட்டோ திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் மாபாஷா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, ஆய்வு செய்தனர். அதில், படப்பை, ஆரம்பாக்கத்தை சேர்ந்த ஹேமந்த், (25) அவரது தம்பி ஜெகதீஷ் (21) ஆகியோர் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. அவர்களை நேற்று கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆட்டோ திருடிய அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: