அரியானா நேற்று முன்தினம் வரை 21 ஆட்டங்களில் விளையாடி 15 வெற்றி, 6 தோல்விகளுடன் 79புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. பாட்னா 20 ஆட்டங்களில் 13 வெற்றி, 6 தோல்வி , ஒரு சமனுடன் 73 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. மேலும் 3வது இடத்தில் டெல்லி 20 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 5 தோல்வி, 4 சமன்களுடன் 71புள்ளியை பெற்று உள்ளது. யுபி 20 ஆட்டங்களில் 11 வெற்றி, 6 தோல்வி, 3சமன்களுடன் 69 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.
பிளே ஆப் சுற்றில் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கான போட்டியில் ஜெய்பூர் பேந்தர்ஸ்(64), யு மும்பா(61), தெலுங்கு டைடன்ஸ்(60), நடப்பு சாம்பியன் புனேரி பல்தன்(55புள்ளிகள்) ஆகியவை உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் டிச.24ம் தேதியுடன் முடிகின்றன. இன்னும் சில ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் தமிழ் தலைவாஸ்(45), பெங்கால் வாரியர்ஸ்(40), குஜராத் ஜெயன்ட்ஸ்(35), பெங்களூர் புல்ஸ்(19) ஆகியவை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டன. இந்த அணிகளின் வெற்றி, தோல்விகள் மற்ற அணிகளின் தரவரிசையில் மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தும்.
The post புரோ கபடி போட்டி: பிளே ஆப் சுற்றில் பாட்னா appeared first on Dinakaran.