×

அரசு டவுன் பஸ் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தவர் கைது

ஈரோடு, டிச.17: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சூரம்பட்டி வலசு வழியாக பவானி வரை அரசு டவுன் பஸ்(எண்3) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு டவுன் பஸ் புறப்பட்டு சூரம்பட்டி வலசு பஸ் ஸ்டாண்ட் சென்றது.பஸ்சை டிரைவர் அண்ணாத்துரை ஓட்டினார். சூரம்பட்டி வலசு பஸ் ஸ்டாண்டில் அண்ணாத்துரை மற்றும் நடத்துனர் உணவு இடைவேளைகாக சாலையோரமாக பஸ்சை நிறுத்தியிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர், திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்புற கண்ணாடி மீது வீசி சேதப்படுத்தினார்.

இதில், பஸ்சின் முன்புற கண்ணாடி முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு ஓடி வந்த பஸ்சின் டிரைவர் அண்ணாத்துரை அந்த வாலிபரை பிடித்து ஈரோடு தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த பெயிண்டர் கணேசன் (28) என்பது தெரியவந்தது. மேலும், கணேசன் மதுபோதையில் பஸ் மீது கண்ணாடி வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கணேசனை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். கணேசன் மீது வழக்கு பதிந்து, கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post அரசு டவுன் பஸ் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Bhavani ,Surampatti Valasu ,Dinakaran ,
× RELATED நாளை முதல் பவானி விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்