லண்டன்: உலகின் மிகவும் பழமையான செய்தித்தாளான தி அப்சர்வர் கடந்த 1791ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 1993ம் ஆண்டு கார்டியன் மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஞாயிறுதோறும் வெளியாகி வந்த தி அப்சர்வர் செய்தித்தாள் விற்கப்பட்டுள்ளதாக கார்டியன் நாளிதழ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்டியன் மீடியா குழுமத்திற்கு சொந்தமான ஸ்காட் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டார்ட்டாய்ஸ் மீடியா ரொக்கம் மற்றும் பங்குகள் மூலமாக உலகின் மிகவும் பழமையான ஞாயிறு செய்தித்தாளான தி அப்சர்வரை வாங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது. லண்டன் டைம்ஸ் முன்னாள் ஆசிரியரும் பிபிசி நியூஸ் இயக்குனருமான ஜேம்ஸ் ஹார்டிங்ஸ் மற்றும் லண்டனுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மேத்யூ பர்சூன் ஆகியோரால் 2019ம் ஆண்டு டார்ட்டாய்ஸ் மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது.
The post உலகின் பழமையான செய்தித்தாள் தி அப்சர்வர் விற்பனை appeared first on Dinakaran.