அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் : டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கிறார். இந்நிலையில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம் சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளன. எனக்கு பரஸ்பரம் என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்தியா நம் சொந்தத்தை பற்றி நாம் பேச வேண்டியதில்லை. ஆனால் இந்தியா எங்களிடம் 100 சதவீதம் வசூலித்தால் அதற்காக நாங்களும் அவர்களிடம் அதையே வசூலிக்கலாம் இல்லையா? உங்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு அனுப்புகிறோம். அவர்கள் 100%, 200% என அதிக வரி வசூலிக்கிறார்கள். இந்தியா அதிக வரி விதிக்கிறது. பிரேசிலும் அதிக வரி வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் வரி வசூலிக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாங்களும் அவர்களிடம் அதே வரியை வசூலிக்க போகிறோம் என்றார்.

The post அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் : டிரம்ப் மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: