சென்னை: ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்’ புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்’ புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாக தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘Journalism’’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவு: சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகளை நேற்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம். பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்து இயங்குவதோடு, திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் வீழ்த்தி, உண்மையை உரக்கச் சொல்கிற வகையில் செயல்படுமாறு கேட்டுக் கொண்டோம். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.