×

மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும்: தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு

சென்னை: மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து விலை நிர்ணயிப்பதை அரசே முடிவு செய்ய வேண்டும். மணல் குவாரிகளை தமிழக அரசு திறக்க வேண்டும். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மணல், ஜல்லி, M-sand போன்ற பொருட்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தினை கண்டித்தும் வருகிற ஜனவரி 7-ம் தேதி நாமக்கலில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தியாகராய நகர் ஜி.ஆர்.டி ஹோட்டலில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் சார்பாக நடைபெற்றது.

அதன்பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு கூறுகையில்:

கல்குவாரி முதலாளிகள் சல்லி,எம் சன்ட் மணல்களின் விலைகளை 40 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த விலையேற்றம் ஏற்படுகிறது. கரூர், நாமக்கல்,சேலம்,ஈரோடு, கோயம்புத்தூர்,திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் சிண்டிகேட் அமைத்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை விலையேற்றம் செய்கிறார்கள். மூலப்பொருள்கள் ஏதும் விலை ஏறாத நிலையிலும் இந்த விலையேற்றம் தொடர்கிறது. எனவே மூலப்பொருட்களின் விலை ஏற்றம் இல்லாத போதும் திடீரென்று ஜல்லி, M-sand போன்ற கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பதால் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு சங்கம் அமைத்து ஒரு கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பது. மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து விலை நிர்ணயிப்பதை அரசே முடிவு செய்ய வேண்டும். மணல் குவாரிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மணல், ஜல்லி, M-sand போன்ற பொருட்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கமும், இந்திய கட்டுனர் சங்கமும் சேர்ந்து பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கல்குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலை நிர்ணயிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி நாமக்கலில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறினார்.

The post மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும்: தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Highway Contractors Federation ,Chennai ,Tamil Nadu government ,Government of Tamil Nadu ,
× RELATED பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு...