பஹ்ரைச்: தடயங்களை மறைப்பதற்காக விபத்தில் சிக்கிய சிறுவனை டிராக்டரை ஏற்றிக் கொன்ற 2 இளைஞர்களை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் வசித்த விக்ரம் (17) என்ற சிறுவன், சஞ்சய் வர்மா என்ற மற்றொரு இளைஞருடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து சஞ்சய் வர்மாவிடம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் தரவில்லை. அதையடுத்து தனது மகன் மாயமானதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசாரின் தொடர் விசாரணைக்கு பின், விக்ரமை வேலைக்கு அழைத்து சென்ற சஞ்சய் வர்மாவை கைது செய்தனர். இதுகுறித்து பஹ்ரைச் காவல் கண்காணிப்பாளர் பிருந்தா சுக்லா கூறுகையில், ‘தோட்டத்தில் விக்ரம் வேலை செய்யும் போது, அங்கு ஓடிக் கொண்டிருந்த அறுவடை இயந்திரத்தில் (டிராக்டர்) சிக்கினார். ஆனால் அவரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, சஞ்சய் சிங் மற்றும் அவரது கூட்டாளி லவ்குஷ் ஆகிய இருவரும் ேசர்ந்து, விக்ரமின் உடலை சிதைத்து வீசி எறிந்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில், ஓடிக் கொண்டிருந்த அறுவடை இயந்திரத்தை விக்ரமின் உடலின் மீது ஓட்டிச் சென்றனர். பின்னர் கூர்மையான ஆயுதத்தால் விக்ரமின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டினர். ெதாடர்ந்து விக்ரமின் சிதைந்த சடலப் பகுதிகளை அந்த கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்தனர். பின்னர் விக்ரம் அணிந்திருந்த ஆடைகளையும் காலணிகளையும் அங்கிருந்த குளத்தில் வீசி எறிந்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் குளத்தில் இருந்து விக்ரமின் ஆடைகள் மற்றும் காலணிகளை மீட்டோம்.
இவ்விவகாரம் தொடர்பாக சஞ்சய் வர்மா மற்றும் அவரது கூட்டாளி லவ்குஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உடல் பாகங்கள் வீசப்பட்டதால், அவற்றை சேரித்து டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம்’ என்று கூறினார்.
The post தோட்டத்தில் விபத்தில் சிக்கிய போது சோகம்; தடயங்களை மறைக்க சிறுவனை டிராக்டரை ஏற்றிக் கொன்ற 2 இளைஞர்கள்: உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய பயங்கரம் appeared first on Dinakaran.