×

தினமும் மது போதையில் வந்து சித்ரவதை; மர்ம உறுப்பை அறுத்து கணவனை கொன்ற மனைவி

அரியலூர்: அரியலூர் அருகே மர்ம உறுப்பை அறுத்து கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆனந்தவாடி மேலத்தெருவை சேர்ந்த விவசாயி சின்னப்பா (45). இவரது மனைவி பச்சையம்மாள் (43). இவர்களுக்கு பாலமுருகன் (23), பானுப்பிரியா என்ற மகன், மகள் உள்ளனர். சிங்கப்பூரில் பாலமுருகன் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியாவுக்கு திருமணமாகி அருகில் உள்ள தாமரைக்குளத்தில் வசித்து வருகிறார்.

சின்னப்பா, தினம்ேதாறும் மது குடித்து விட்டு பச்சையம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து பச்சையம்மாள், பானுப்பிரியா ஆகியோரிடம் சின்னப்பா தகராறில் ஈடுபட்டார். இதனால் அருகில் உள்ள வீட்டுக்கு இருவரும் சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் கை, கால்களின் நரம்புகள் மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சின்னப்பா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் பச்சையம்மாள் தெரிவித்தார். பின்னர் சின்னப்பாவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். தகவலறிந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேகமடைந்து பச்சையம்மாளிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் தான் சின்னப்பாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த வாக்குமூலத்தில், ‘சின்னப்பா அடிக்கடி மதுபோதையில் வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மகள் வீட்டுக்கு வந்திருந்த நிலையிலும் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தினார். அவருக்கு பயந்து 2 பேரும் பக்கத்து வீட்டில் தஞ்சமடைந்ேதாம். அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து இரும்பு குழாயை எடுத்து கணவரின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் மயங்கி விழுந்த அவர், எழுந்தால் என்னை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் வீட்டில் கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கை, கால்களை அறுத்தேன். அப்போதும் ஆத்திரம் அடங்காததால் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்தேன்’ என்றார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தினமும் மது போதையில் வந்து சித்ரவதை; மர்ம உறுப்பை அறுத்து கணவனை கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Chinnappa ,Anandawadi ,Aryalur district ,Sentura ,Pachayammal ,Balamurugan ,Banupiriya ,
× RELATED அரியலூரில் அம்பேத்கர் சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை