×

வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் தேவி (50). இளநீர் கடை நடத்தி வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரது கணவர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு தேவி, மருத்துவமனை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தேவி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Devi ,Kannagi Nagar, Duraipakkam ,Kelambakkam ,
× RELATED எலக்ட்ரீஷியனிடம் செயின் பறிப்பு