- மெப்ஸ்
- தாம்பரம்
- மாத்ரவஞ்சேரி
- மெபெஸ்
- ஏற்றுமதி வளாகம்
- தம்பரம் சானடோரியம்
- ஜுப்லி அபார்ட்
- நெல்லிகுப்பம், நாமக்கல், குமாரபாளியம்
- மூர்த்தி
- தஞ்சாவூர்
- MEPS
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் அருகே மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு, நெல்லிக்குப்பத்தில் உள்ள ஜூப்ளி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நாமக்கல், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (34), தஞ்சாவூர், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (29) ஆகியோரை தாம்பரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில், மூர்த்தி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராஜசேகர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கேமராமேனாக இருந்து வந்ததும் தெரியவந்தது. ராஜசேகர், கிரெண்டர் செயலி மூலமாக ஆண் நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது வழக்கம் எனவும், அப்படி அந்த செயலி மூலமாக ராஜசேகருக்கு அறிமுகமான மூர்த்தி மெத்தபெட்டமைன் போதை பொருளை உடலில் செலுத்தி செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் பின்னர் அந்த போதைக்கு அடிமையானதால் மூர்த்தி ஈரோட்டில் இருந்து போதை பொருளை வாங்கி வந்து, இருவரும் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் வெள்ளை மெத்தபெட்டமைன் ஒரு கிராம் 7000 ரூபாய்க்கும், மஞ்சள் நிற மெத்தை பெட்டமைன் ஒரு கிராம் 8000 ரூபாய்க்கும் இருவரும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 2.87 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.
The post மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் அருகே மெத்தபெட்டமைன் விற்ற ஐடி ஊழியர் கைது appeared first on Dinakaran.