கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். டிச.16-ல் பள்ளிக்கு வழங்கப்பட்ட 197 முட்டைகளில் உடைந்து, அழுகிய 5 முட்டைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளன. குழித்துறை கிராம தொடக்கப் பள்ளிகளில் பெறப்பட்ட 96 முட்டைகளில் உடைந்து, அழுகிய ஒரு முட்டை மாற்றி வழங்கப்பட்டது. கெட்டுப்போன முட்டைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.
The post கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.