×

அம்பேத்கரை பாஜகவுக்கு பிடிக்கவில்லை: செல்வப்பெருந்தகை

சென்னை: அம்பேத்கரை பாஜகவுக்கு பிடிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள், நினைவு நாளில் உருவப் படத்துக்கு
பாஜகவினர் மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் மக்களவையில் அம்பேத்கர் பற்றி பேசினால் பாஜகவுக்கு பிடிக்கவில்லை. அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார். அதானி மீது எதற்காக ஒன்றிய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் சிபிஐ, வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தும் அதானி மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்றும் கூறினார்.

The post அம்பேத்கரை பாஜகவுக்கு பிடிக்கவில்லை: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : BJP ,Ambedkar ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Adani ,Ambedkar Bhajav ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் போராட்டம்