வீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது

ஓமலூர், டிச.18: ஓமலூர் வட்டாரத்தில் சந்து கடைகளின் அதிகளவில் உள்ளது. கிராமங்களில் வீடுகள், கடைகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஓமலூர் போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாட்டுக்காரனூரை சேர்ந்த செங்குட்டுவன் (55) என்பவரது வீட்டில், தேக்கம்பட்டி ஊராட்சி வட்டக்காடு பகுதியை சேர்ந்த செல்வம் (49) என்பவர் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வீட்டையே டாஸ்மாக் கடை போல மாற்றி, அனைத்து வகை மது பாட்டில்களையும் வைத்து விற்பனை செய்து வந்த செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 291 மதுபான வகைகளை பறிமுதல் செய்தனர். குடிமகன்கள் கேட்கும் அளவிற்கு ஏற்றாற்போல் செல்வம் கட்டிங் அடிப்படையிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து, ஓமலூர் போலீசார் செங்குட்டுவன், செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான செங்குட்டுவனை தேடி வருகின்றனர்.

The post வீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: