×

மேல்மலையனூர் தாலுகாவில் கன்று குட்டியை அடித்து 100 அடி உயர மலைக்கு தூக்கி சென்ற மர்ம விலங்கு: சிறுத்தை நடமாட்டமா? கிராம மக்கள் அதிர்ச்சி


மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கோட்டபூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி. இவர் மலை குன்றின் கீழே உள்ள தனது விவசாய நிலத்தில் கன்று குட்டியை கட்டி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த கன்று குட்டியை மர்ம விலங்கு அடித்து சுமார் 100 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு இழுத்து சென்று கன்று குட்டியின் கழுத்து மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளை கடித்து தின்றுள்ளது. கன்றுகுட்டி மர்ம விலங்கால் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சக்ரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கன்று குட்டி சடலத்தை பார்வையிட்டு அது உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்களின் கால் தடம் போன்று மலைப்பகுதியில் காணப்படுவதால் சிறுத்தை நடமாட்டமாக இருக்குமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பின்புறம் அமைந்துள்ள மலை குன்றில் இச்சம்பவம் நடந்துள்ளதால் அரசு பள்ளி மாணவர்களும் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே கோட்டப்பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க மலைப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேல்மலையனூர் தாலுகாவில் கன்று குட்டியை அடித்து 100 அடி உயர மலைக்கு தூக்கி சென்ற மர்ம விலங்கு: சிறுத்தை நடமாட்டமா? கிராம மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Melmalaiyanur ,Chakravarthy ,Kottapundi ,Melmalaiyanur taluka ,Villupuram district ,Dinakaran ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் அருகே பரிதாபம்...