×

டாட்டு கடையில் நாக்கு வெட்டிய விவகாரம்: விசாரணை குழு அமைப்பு

சென்னை: திருச்சியில் டாட்டு கடையில் நாக்கை வெட்டிய விவகாரத்தில் விசாரிக்க மருத்துவத்துறை விசாரணை குழு அமைத்துள்ளது. திருச்சியில் ஏலியன் பாய் என்ற பெயரில் டாட்டு ஷாப்பில் வைத்து நாக்கை இரண்டாக வெட்டி பாம்பு நாக்கு போன்று மாற்றிய விவகாரத்தில் திருச்சி மாநகர சுகாதார அதிகாரி விஜயசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2 பேரை போலீஸ் கைது செய்தது. அறுவை சிகிச்சை கருவி, மயக்க மருந்தை இருவரும் எப்படி பயன்படுத்தினர்? என சந்தேகம் எழுந்தது. மருத்துவ உபகரணங்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையையும் மருத்துவத்துறை தொடங்கியது.

 

The post டாட்டு கடையில் நாக்கு வெட்டிய விவகாரம்: விசாரணை குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,Alien Boy ,Investigation ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...