புதுடெல்லி: மக்களவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் பேசுகையில், அதானி விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தாதது ஏன்? கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை செபி தலைவர் ஐசிஐசி வங்கியில் இருந்து ரூ.16.4கோடி பெற்றதாக கூறப்படுகின்றது. இது செபியிடம் இருந்து அவர் பெற்ற சம்பளத்தை காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். செபி விசாரணையின் கீழ் இணைக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாடகை வருமானத்தையும் அவர் பெற்றுள்ளார்.
செபி ஒரு நிறுவனத்தை விசாரிக்கிறது. அதன் தலைவர் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு சொத்தை வாடகை விடுகிறார். செபியின் தலைவர் ரூ.36.9கோடி மதிப்பிலான பத்திரங்களில் வர்த்தகம் செய்துள்ளார். செபியின் நெறிமுறைகளை மீறியுள்ளார். மாதபி புச் மீது இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும், நிதியமைச்சகம் அவருக்கு எதிராக சுதந்திரமான விசாரணையை தொடங்கவில்லை. எந்த ஒரு ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நிதியமைச்சரின் செயலற்ற தன்மை அரசின் வெளிப்படைதன்மை மற்றும் மூதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கான அர்ப்பணிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது. நிதியமைச்சர் தீர்க்கமாக செயல்படத் தவறியது அரசின் நம்பக தன்மையை களங்கப்படுதியது மட்டுமின்றி நிதி நிர்வாக கட்டமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அதானியின் அரசாங்கம், இது அதானிக்கான அரசாங்கமாகும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவானது இந்த மொத்த விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும்” என்றார்.
The post செபி தலைவர் விவகாரத்தில் அரசு செயல்பட தவறியது குறித்து விசாரணை: மக்களவையில் காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.